எரிமலையால் ஏற்படும் நன்மைகள்

chemtrails49_01
ஓரிடத்தில் எரிமலை வெடிக்கும்போது அது பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. 1815-ல் ஜாவா கடற்கரை பகுதியில் உள்ள ‘டோம்போரோ’ தீவிலிருந்த எரிமலை வெடித்த பொது, உலகமே கண்டிராத அளவுக்கு மிகப்பெரிய அழிவை உருவாக்கியது. அப்போது 80 ஆயிரம் பேர் இறந்தார்கள். எண்ணற்ற பறவைகளும், விலங்குகளும் கொல்லப்பட்டன.
எரிமலைகள் உருவாக்கும் அழிவைவிட பூகம்பங்கள் பல மடங்கு அதிக அழிவை உருவாக்குகின்றன. பூகம்பம் ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த நில நடுக்கத்தின் காரணமாக ஒரு பெரிய நகரத்திலிருக்கும் கட்டடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து விடுகின்றன. இந்த கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பல லட்சக்கணக்கான மக்கள் இறந்திருக்கிறார்கள்.
அணுகுண்டைவிட ஹைட்ரஜன் குண்டுகள் பல மடங்கு அதிக அழிவை உருவாக்குகிறது. எரிமலை வெடிக்கும்போது, ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் சக்தி வாய்ந்த பல ஹைட்ரஜன் குண்டுகள் வடிக்கும்போது  வெளிப்படும் அழிவு சக்தியைவிட, அதிக அழிவு சக்தி வெளிபடுகிறது.
எரிமலை வெடிக்கும்போது, பல டன் எடை கொண்ட கற்கள் பல மைல் தூரத்திற்கு தூக்கி எறியப்படத்தை உலக மக்கள் கண்டிருக்கிறார்கள். தூங்கிக்கொண்டிருக்கும் சில எரிமலைகள் எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திடீரென்று வெடித்து, மக்கள் தப்பித்துகூட ஓட சந்தர்ப்பம் தராமல் நிறைய மக்களை அழித்திருக்கின்றன.
எரிமலை வெடிக்கும்போது டன்கனக்கான எடையுள்ள எரிகற்கள் ஆகாயத்தை நோக்கி வீசப்படுகின்றன. சில எரிமலைகள் பல டன் எடை கொண்ட விஷ வாயுக்களைக் கொண்ட மேக மூட்டத்தை உருவாக்கி, மனிதர்கள், விலங்குகள், செடி கொடிகள் போன்ற அனைத்து உயிரினங்களையும் அழித்து விடுகின்றன.
பல எரிமலைகள் ரத்தச் சிவப்பாக காட்சி தரும் எரிமலைக் குழம்பை வெளியேற்றுகிறது. அதிக வெப்பத்தினால் கொதித்துக் கொண்டிருக்கும். இந்த தீக்குழம்ப்பு நிறைய இடத்துக்கு பரவி அனைத்தையும் எரித்துவிடுகிறது.
இப்படி அளிக்கும் எரிமலைகளும் மனிதனுக்கு சில நன்மைகளை செய்கிறது. பூமிக்கு வெகு அழத்தில் இருக்கும் வளமான கனிம சத்துக்கள் நிறைந்த மண்ணையும் கற்களையும் மலைகள் மீதும் சமவெளிகள் மீதும் மிகப் பெரிய அளவில் வீசப்படுகிறது. இது விவசாயத்தை பெருக்க உதவுகிறது. உலகின் பல இடங்களில் எரிமலை வெளிப்படுத்தும் குழம்பை பயன்படுத்தி நீரை அதிக அழுத்தம் கொண்ட நீராவியாக மாற்றி அந்த நீராவியை கொண்டு விசையாழிகளை சூழ வைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்யப்படுகிறது.
பூமிக்கு வெகு ஆழத்திலிருக்கும் பல தாதுப்பொருள்கள் வெளியே தூக்கி எறியப்படுகின்றன. பல தொழிலகங்களின் உற்பத்திக்கு இவை மூலப்பொருட்களாக பயன் படுகிறது. எரிமலையின் உதவி இல்லாமல், வெகு ஆழத்தில் இருக்கும் இந்த தாது பொருட்களை வெளியே எடுத்து வரவே முடியாது. இவையெல்லாம் எரிமலையால் ஏற்படும் நன்மைகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s