துப்பறிய உதவும் டி.என்.ஏ.

லகில் கோடிக் கணக்கான மனிதர்கள் இருகிறார்கள்.இவர்களில் ஒருவரின் கைரேகை போல மற்றொருவரின் கைரேகை இருப்பதில்லை. உலகில் உள்ள 720 கோடி மக்களுக்கும் 720 கோடி கைரேகைகளை இயற்கை வரைந்திருக்கிருது. இதைப்போலவே மற்றொரு அற்புதத்தையும் உயிரினங்களின் உடலில் இயற்கை ஏற்படுத்தி இருக்கிறது. அதுதான் மரபணு என்று சொல்லப்படுகிற டி.என்.ஏ. ஒருவருடைய டி.என்.ஏ.வரைபடம் மற்றொருவருடன் ஒருபோதும் ஒத்துப்போகாது. இதனை மூலக்கூருகையெத்து என்கிறார்கள்,விஞ்ஞானிகள்.

depositphotos_3743872-3d-Dna-in-color

இந்த மூலக்கூற்றை வைத்து மிகத்துல்லியமாக துப்பறிய முடியும். மனிதனின் கைரேகையை விட இது கூடுதல் துல்லியம் மிக்கதாக இருக்கும். டி.என்.ஏ. வரைபடம் என்பது ஒரு கருப்புப் பட்டையில் இடையில் இடைவெளிகளைக் கொண்டிருக்கும். இதில் காணப்படும் இடைவெளிகளைக் கொண்டே டி.என்.ஏ.வின் வரைபடத்தில் வேறுபாடுகள் கண்டறியப்படுகின்றன.

மனிதனின் உடலை உருவாக்கத் தேவையான எல்லாவகை மூலப்பொருட்களையும் அவற்றின் குறியீடுகளையும் டி.என்.ஏ.வரைபடம் கொண்டுள்ளது. நமது உடலை எப்படி நடத்திச்செல்வது, செயல்பட வைப்பது போன்ற வழிகாட்டுதல்களும் இவற்றில் பொதிந்துள்ளன. ஒரு சிசுவின் மரபணுக்களில் சரிபாதி தாயிடமிந்தும், மீதி தந்தையிடமிருந்தும் வருகின்றன. அதனால்தான் குழந்தை தாய், தந்தை இருவரின் குணநலன்களும் கலந்த கலவையாக இருக்கிறது.

stock-footage-dna-structure-d-digital-video

இந்த டி.என்.ஏ. மூலம் மருத்துவமனையில் காணாமல் போகும் குழந்தையைக் கண்டுபிடிக்கலாம். பாலியல் வன்முறைக்கு ஆளாகி கருவுற்ற பெண்ணின் தந்தையைக் கண்டுபிடிக்கலாம். குழந்தையின் உடலின் இருந்து எடுக்கப்படும் டி.என்.ஏ.யை தாய்-தந்தை டி.என்.ஏ.யுடன் பொருத்திப் பார்க்கும் பொது கண்டுபிடித்து விடலாம். ஒருவரின் கண்ணீர், வியர்வை, ரத்தம், விந்து, சட்டையில் ஒட்டியுள்ள தோலின் செல்,நகம் போன்றவற்றின் மூலம் டி.என்.ஏ. வரைபடம் தயாரிக்க முடியும். இதுவே துப்பறிவதற்கு மிகவும் உதவுகிறது.